• Sun. Dec 8th, 2024

ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சமந்தா

Dec 4, 2021

நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை சன்னி லியோன் மட்டுமே ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளம் வாங்கி அனைத்து நடிகைகளையும் அண்ணாந்து பார்க்க வைத்தார்.

அதற்கு காரணம் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலும் அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அதற்கான எதிர்பார்க்கும் தான் இவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதற்கு காரணம். சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி எனும் படத்தில் கூட ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது இதனை சமந்தாவும் பின்பற்றி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா தற்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

எப்போதும் நடிகைகள் பொருத்தவரை படத்தில் இன்னொரு கதாநாயகி இருந்தால் நடிக்க மாட்டார்கள். ஆனால் சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

சமந்தா, அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் சன்னிலியோன் போல் ஒரு கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் நடனம் ஆடுவதற்காக கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கில் சமந்தாவிற்கு ஏகப்பட்ட மார்க்கெட் இருப்பதால் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலும் அந்த படம் வெற்றி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையில் புஷ்பா படக்குழுவினர் நடனமாட வைத்ததாக கூறி வருகின்றனர்.

மேலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அதனால் வசூலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு சில முன்னணி கதாநாயகிகள் உட்பட பல பிரபலங்களை நடிக்க வைத்து வருவதாக கூறி வருகின்றனர்.