• Sat. Oct 12th, 2024

தளபதி – 66 திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற சன் பிக்சர்ஸ்

Oct 13, 2021

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை தில் ராஜூ என்பவர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் வம்சி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை என்ற நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூபாய் 70 கோடிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது