• Fri. Apr 18th, 2025

விஜய் சேதுபதியுடன் தமன்னா!

Jun 29, 2021

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி எல்லோருக்கும் பிடித்து செம பேமஸ் ஆகிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து மற்ற தொலைக்காட்சிகளும் பிரம்மாண்டமாக சமையல் நிகழ்ச்சிகளை துவங்கி வருகின்றனர்.

ஆம், சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் தமிழ் இந்தியா நிகழ்ச்சியை விஜய் சேதுபதி
தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ஷூட்டிங் அண்மையில் நடைபெற்றது. அதன் ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகியது.

குறித்த நிகழ்ச்சியில் தமன்னாவும் கலந்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் தமன்னா. கமலை தொடர்ந்து டிவியில் கலக்க வரும் மக்கள் செல்வனுக்காக ரசிகர்கள் கூட்டம் ஆவலில் காத்திருக்கிறது.