• Wed. Jan 15th, 2025

இணையத்தில் வைரலாகும் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட்

Aug 25, 2021

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது.

ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மதுரை அருகே மிகப் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.