• Sun. Dec 10th, 2023

மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கிடைத்த உயரிய கெளரவம்

Aug 24, 2021

மலையாள திரையுலகில் ஜாம்பவான்ங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர்.

இந்நிலையில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது.

இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி, இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்தார்.

இதேவேளை அமீரக அரசிடம் இருந்து தென்னிந்திய நடிகர்கள் கோல்டன் விசா பெறுவது இதுவே முதன்முறை ஆகுமாம்.

இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.