• Sun. Mar 24th, 2024

சில மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற வலிமை சிங்கிள்

Aug 3, 2021

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து உள்ளன. இதனையடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் அஜித் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதே நாளில் இந்த பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் உள்ள விக்னேஷ் சிவன் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இந்த பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.