• Sat. Jan 18th, 2025

கவினை பாராட்டிய இளைய தளபதி விஜய்

Jul 7, 2021

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் சமீபத்தில் தான் பீஸ்ட் படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

அத்துடன் பீஸ்ட் படத்தின் பூஜையின்போது பிக்பாஸ் கவின் கலந்துகொண்டார். அதனால் கவினும் இந்த படத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது.

ஆனால் நெல்சனின் நண்பரான அவர் டாக்டர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். எனவே பீஸ்ட் படத்திலும் அவர் உதவி இயக்குநராக இருப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் முதல் நாள் ஷூட்டிங் போது தளபதி விஜய் தன்னிடம் பேசியது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார் கவின். தான் நடித்த அஸ்க்கு மாரோ பாடலை பார்த்ததாகவும், அதை பாராட்டி தன்னிடம் தளபதி பேசினார் என்றும் கவின் நெகிழ்ந்து கூறினார்.