• Tue. Oct 15th, 2024

தந்தைக்குச் செய்த சத்தியம் – விரைவில் நயன்தாராவின் திருமணம்!

Jul 7, 2021

நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்குவார்கள்.

அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என எண்ணி ரசிகர்கள் கூட்டமே பெரும் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நயன் விக்னேஷ் சிவனுடன் தனது வீட்டிற்கு சென்றது அவரது தந்தையை பார்க்கத்தானாம்.

நயன்தாரா தந்தை உடல்நலம் குன்றி இருக்கிறாராம். இப்போதைக்கு அவரின் ஆசை நயனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது தானாம்.

அதை கேட்டு நயன் நிச்சயம் கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன் என தந்தை உறுதியளித்துவிட்டு வந்தாராம். ஆக விரைவில் நயன் விக்கியின் திருமணம் நடந்தேறலாம்.