• Sat. Dec 7th, 2024

துப்பறிவாளன் 2 குறித்த தகவலை வெளியிட்ட விஷால்

Dec 7, 2021

துப்பறிவாளன் 2 குறித்த முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.

மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் விஷால் நடித்த போது இரண்டு பேரும் அண்ணன், தம்பியாக நெருக்கத்தில் இருந்ததும், துப்பிறிவாளன் 2 படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற போது இருவரும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டதும் நாடறியும்.

துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பது என விஷால் முன்பே முடிவு செய்து, மார்ச் மாதம் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.

மிஷ்கின் தொடர்ச்சியாக இளையராஜா குறித்து புகழ்ந்து பேசி வருகிறவர். அவர்தான் துப்பறிவாளன் 2 படத்துக்கு இசை. மிஷ்கின் படத்திலிருந்து விலகியதால் இளையராஜாவும் விலகுவார் என சிலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், மிஷ்கினா அது யாரு என்பது போல் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து அவர் விலகியதை இளையராஜா கண்டுகொள்ளவில்லை. விஷால் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு அவர்தான் இசையமைக்க உள்ளார்.

துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை 2022 ஜனவரியில் லண்டனில் தொடங்கயிருப்பதாக விஷால் கூறியிருந்தார். இதற்காக அவர் ஜனவரியில் லண்டன் செல்கிறார். ஆனால் தற்போது படப்பிடிப்பு ஏப்ரல் மாதமே தொடங்கும் என அறிவித்திருக்கிறார். அதற்கு முன் லத்தி உள்ளிட்ட படங்களை முடிக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.

துப்பறிவாளன் 2 இயக்குனராக விஷாலுக்கு முதல் படம். அடுத்த வருட இறுதியில் தனது கனவுப் படத்தை இயக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.