• Sun. Dec 10th, 2023

சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் எது தெரியுமா?

Jun 12, 2021

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவி ஒரே படத்தில் உலக பேமஸ் ஆனார். அதன் பிறகு தமிழில் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இன்னமும் பிரேமம் மலர் டீச்சராகவே அவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடிப்பதற்கு முன்னரே தமிழில் தாம் தூம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதே போல் நடிகர் பிரசன்னா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான கஸ்தூரிமான் என்ற படத்திலும் சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது.