• Sun. Jul 21st, 2024

அடுத்த குக் வித் கோமாளியில் பிரபல சமூக வலைத்தள ஸ்டார்! யாரென்று தெரியுமா?

Jun 12, 2021

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

இதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி வெற்றியாளர் ஆனார். மேலும் ஷகீலா இரண்டாவது இடத்தை பிடிக்க, அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

பெரிதும் ரசிக்கப்படும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் தற்போதே கேட்க துவங்கிவிட்டனர்.

இதில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

இந்நிலையில் டிக் டொக் மற்றும் யூடியூப் தளத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான, ஜி.பி. முத்து, குக் வித் கோமாளி சீசன் 3க்கு வரவிருக்கிறார் என்று இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது உண்மையா, அல்லது வெறும் வதந்தி தானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.