• Mon. Aug 2nd, 2021

உலகளவில் 19.27 கோடியை கடந்த கொரோனா தொற்று!

Jul 22, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19.27 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 192,781,196 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,141,813பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 175,316,717 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,322,666 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,140,939 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 625,799 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 29,456,722 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,474,489என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 545,690 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 18,206,173 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,256,839 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 419,021 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 30,421,813 என்பதும் குறிப்பிடத்தக்கது.