சிறப்பு அனுமதியுடன், நாட்பட்ட நோய்கள் அல்லது பல்வேறு சிக்கல்கள் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
எந்தவொரு கெரோனா வைரஸ் மாறுபாடும் வயதைப் பார்க்காது என்று குறிப்பிட்ட அவர், புதிய ஒமிக்ரோன் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.