• Fri. Nov 22nd, 2024

கொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி

Aug 2, 2021

இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை கொரோனாவிற்கு எதிராக எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இந்தியாவில் இந்த கொரோனாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அதிகம் கொடுக்கப்படுகின்றன. கேரளா மானிலத்தில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் சிலர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, ஆயுர்வேத சிகிச்சை முறையில், அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் இந்தியாவில் தரப்படுகின்றன.

கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும், சில இடங்களில் அஸ்வகந்தா மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரித்தானியா லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் என பல பகுதிகளில் 2,000 பேரிடம் இந்த பரிசோதனை விரைவில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.