• Sat. May 11th, 2024

17.56 கோடியாக அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு

Jun 11, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.56 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 175,602,504 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,788,164 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 159,136,633 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா. பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளாகும்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,275,437 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 613,906 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 28,277,486 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,215,159 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 482,135 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 15,670,754 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,273,338 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 363,097 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 27,778,894 என்பதும் குறிப்பிடத்தக்கது.