சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது.
உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 31.01 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.