• Sun. Dec 10th, 2023

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

Aug 4, 2021

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் எட்டு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து மூன்றாவது அலையின் ஆரம்பம் இதுதான் என்று ஒரு சிலர் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இன்னும் மூன்றாவது அலை தொடங்குவதற்கான அறிகுறி இல்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றன.