• Mon. Oct 2nd, 2023

பிரிட்டன் இளவரசருக்கு மீண்டும் கொரோனா தொற்று

Feb 10, 2022

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று(10) காலை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸ் ஏற்கெனவே கடந்த மார்ச் 2020-ல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.