• Tue. Nov 5th, 2024

உலகளவில் 23.89 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்று

Oct 12, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.89 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 238,995,054 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,872,275 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 216,236,008 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 17,886,771 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.