• Wed. Nov 20th, 2024

கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று

Feb 2, 2022

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ், கொரோனாவின் அடுத்த அலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் உலகில் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், பிரதமர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் நான் நலமாக இருக்கிறேன். அலுவலகப் பணிகளை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்வேன். நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரமருடன் தொடர்பில் இருந்தவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.