• Sat. Mar 23rd, 2024

இந்தியாவின் கொரோனா நிலவரம்

Nov 25, 2021

இந்தியாவில் நேற்று (24) ஒரேநாளில் 5 ஆயிரத்து 586 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 1 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது.