• Sun. Mar 16th, 2025

இலங்கையின் கொரோனா நிலவரம்

Mar 14, 2022

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 56 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரை 16,397 கொரோனா தொற்றாள்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,797 ஆக அதிகரித்துள்ளது.