• Fri. Oct 11th, 2024

இலங்கையின் கொரோனா நிலவரம்

Dec 9, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 69 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இவர்களில் 11 ஆயிரத்து 928 பேர், சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 365 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 43ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.