• Sun. May 19th, 2024

ஏழு மாத குழந்தைக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி

Dec 20, 2021

தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைக்கு ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தி விட்டனர்.

சற்று நேரத்துக்கு பின் இது தெரிய வந்தது. பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்தக் குழந்தை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. பின், ‘டிஸ்சார்ஜ்’ செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தங்கள் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே, 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.