இந்தியாவில் கொரொனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.
கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சில நாட்களாகக் குறைந்துவரும் நிலையில்,
மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் விரைவில் 3 ஆம் கொரோனா அலை பரவும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎம் கூறியுள்ளதாவது: இரண்டாம் கொரொனா தொற்று ஓரளவு குறைந்துள்ள நிலையில், கொரொனா தடுப்பு விதிகளான சமூக விலகல், மாஸ்க் அணிவது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்காமல் உள்ளது தொற்றுப் பரவலை அதிக்கப்படுத்தும் எனவும், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளது.