கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாலும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாலும் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.