• Thu. Nov 21st, 2024

இலங்கையில் 9000 ஐ அண்மிக்கும் உயிரிழப்புகள்!

Aug 31, 2021

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

115 ஆண்களும் 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 30 வயதுக்கு குறைவான 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 36 ஆயிரத்து 81ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 992 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 55 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.