• Wed. Jan 15th, 2025

இலங்கையில் கோரமுகம் காட்டும் கொரோனா; 216 பேர் உயிரிழப்பு

Aug 30, 2021

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

115 ஆண்களும்101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 41 பேர் மரணித்துள்ளதுடன் 30க்கு கீழ்பட்டோரில் ஐவரும் மரணித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,991 பேர் உயிரிழந்துள்ளனர்.