• Sat. Jul 20th, 2024

உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 17.47 கோடி!

Jun 9, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.47 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 174,738,762 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதிலும் கொரோனாவிற்கு 3,762,570 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 158,133,935 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னிலை வகிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,242,866 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 613,052 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 28,220,863 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,038,260 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 477,307 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 15,494,071 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,088,176 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 353,557 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 27,496,198 என்பதும் குறிப்பிடத்தக்கது.