• Sun. Oct 13th, 2024

ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவிற்கு அனுமதி

Jul 5, 2021

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-ஐ உற்பத்தி செய்ய, பானேசியா பயோடெக் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவில் உள்ள கேமாலயா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் இந்த தடுப்பூசி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பானேசியா பயோடெக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட தரவுகளின் படி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91 புள்ளி 6 சதவிகித பாதுகாப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 54 நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.