இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. மேலும் இஸ்ரேல் அரசு ஒமிக்ரான் பரவலில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் நான்காவது டோஸ் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தி வருகிறது. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளியை சில நாடுகள் குறைத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 4, 5 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துவது நல்லது இல்லை. அதற்கு பதிலாக தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் உருவாக்க வேண்டும். இவ்வாறு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் மக்களும் அதை பின்பற்றுவார்கள்.
மேலும் ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள். இதுவே பொது சுகாதார பார்வையிலும் மிகச்சிறந்த நடைமுறையாக இருக்கும். எனவே ஒமிக்ரானுக்கு எதிராக சக்திவாய்ந்த தடுப்பூசி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பைசர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்ட் போர்லா தகவல் தெரிவித்துள்ளார்.