• Wed. Oct 23rd, 2024

சுவிட்சர்லாந்தின் புதுவித “க்ரீன் பாஸ்” திட்டம்

Jun 26, 2021

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து இம்றிலிருந்து(26) கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் உட்புறமாக நடைபெறும் தனியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சுமார் 30 பேர் வரை பங்கேற்கலாம்.

அதேசமயம் வெளிப்புறமாக நடைபெறும் தனியார் நிகழ்ச்சிகளிலும் சுமார் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்ற தளர்வை கொண்டுவருவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. அதோடு மட்டுமின்றி உட்புறமாக நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 250 பேரும், வெளிப்புறமாக நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 500 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளது.

இதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டவர்கள், தொற்று தங்களுக்கு இல்லை என்று சோதனை முடிவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் சுவிட்சர்லாந்து ஒரு புதுவித “க்ரீன் பாஸ்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த “க்ரீன் பாஸ்” என்னும் திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடோ, தடையோ இல்லை என்று ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.