• Thu. Nov 21st, 2024

தடுப்பூசி போட்டால் உள்ளே வரலாம் – அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு

Nov 23, 2021

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை மெல்ல தளர்த்தி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் முன்னதாக பயணிக்க சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்த நிலையில் தற்போது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் சிறப்பு அனுமதியின்றி பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர்ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “டிசம்பர் 1ம் தேதி முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் தடையின்றி ஆஸ்திரேலியாவிற்குள் வரலாம். மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் உரிய விசாவுடன், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் போதுமானது” எனக் கூறப்பட்டுள்ளது.