• Wed. May 31st, 2023

இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி

Jul 2, 2021

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறையினருக்கு அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் .