• Mon. Dec 2nd, 2024

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு எச்சரிக்கை

Aug 6, 2021

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி பல்வேறு நாடுகளில் பரவியது.

இத்தொற்றின் முதல் அலை உலகளவில் முடிந்த நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

பல மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கொரொனா தொற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்த பின் மீண்டும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் எனவும், இப்பிரச்சனை அவர்களுக்கு எத்தனை நாட்கள் நீளும் எனக் கூற முடியாது எனவும், அவ்வாறு பாதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.