• Fri. Nov 22nd, 2024

முந்தைய கொரேனாவை விட மிகவும் மோசமானது – பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை

Jul 19, 2021

பிரான்சில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், நாட்டில் கொரோனா தட்டுப்பாடு அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளதாக, நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்சில் அதிதீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக அங்கு குறைந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிரித்தானியா போன்ற நாடுகள், பிரான்சில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர், ஒலிவியே வெரோன் கொரோனத் தடுப்புக் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனத் தொற்றின் தீவிரம் நம் கண்கூடாக தெரிகிறது. இது முந்தைய கொரேனாத் தொற்று அலைகளை விட மிகவும் மோசமானது என எச்சரித்துள்ளார்.

மேலும், வரும் வாரங்களில் பிரான்ஸ் மீண்டும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள விதிக்கலாம் என்பதனையும் தான் மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.

நாங்கள் உடனடியாக சுகாதாரக் கட்டுக்காடுகளை விதித்து, கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு இடைவெளிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.