
பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக ஆண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.
நன்மைகள்
பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்கும்.
இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கும். இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதால் நீரிழிவு நோயும் நெருங்காது.
செரிமானத்தை மேம்படுத்துவதால் தேவையற்ற கொழுப்பு தேக்கத்தை தடுக்கும். இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது.
பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு.