• Fri. Jul 26th, 2024

சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை – பன்னீரின் நற்பலன்கள்

Jul 31, 2021

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அழகாக இருக்கவே விரும்புவோம். பார்ப்போரின் கண்களுக்கு பரவச உணர்வை தரக்கூடிய அழகு சாதனப்பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு.

சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்வைக்கு:

சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும். வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவும் பெறும்.

கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து.

சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் காற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.

பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.

பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.