• Fri. Jul 26th, 2024

ஆப்பிளின் மருத்துவ குணங்கள்

Aug 4, 2021

பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதில் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்து தான் உள்ளது.

ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். ஆப்பிளை கடித்து சாப்பிடுவது உங்கள் பற்களை பளிச்சென்று ஒளிரச்செய்யும். மேலும் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கவும் ஆப்பிள் உதவும்.

குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க ஆப்பிள் மிகவும் உதவுகிறது. தினமும் இரண்டு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

ஆப்பிளில் விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ளது. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நம் உடலின் செரிமானப் பிரச்னை இருக்காது. மேலும் அதே சமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இதயம் சார்ந்த நோய்களில் இருந்து உங்களை காக்க மிகவும் உதவும்.

நமது ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல பயனளிக்கும்.

ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒன்று. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தும் மிகவும் உறுதுணையானதாகும்.