• Fri. Jul 26th, 2024

பழங்கள் மற்றும் காய்கறிகளை கெட்டுப்போகாமல் பார்க்கும் வழிமுறைகள்

Jan 5, 2022

பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி நீண்ட நாட்கள் அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், அதையெல்லாம் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினாலே அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.

காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் சில பூஞ்சைகள் படரக்கூடும். இதை தடுக்க 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கறிகளை முக்கி கழுவி, உலர வைக்கலாம்.

இதனால், பூஞ்சை உருவாகுவதையும், அழுகலையும் வினிகர் தடுக்கும். அத்துடன் பழங்கள், காய்கறிகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அகற்ற உதவும்.

அதுமட்டுமின்றி மேலே படந்திருக்கும் கிருமிகளையும் அழித்துவிடும். வினிகரில் முக்கிய பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி, துணியால் துடைத்தெடுத்து சேமித்து வைக்கலாம்.

இதனைத்தொடர்ந்து, புதினா, கொத்தமல்லி தழை, துளசி போன்ற மூலிகை வகை செடிகளின் தண்டு பகுதியை நீரில் முக்கி வைக்கலாம். இதனால் அவை வாடிப்போவதை தவிர்க்கலாம்.

கண்ணாடி ஜார்களில் தண்ணீர் ஊற்றி அதில் மூலிகை செடிகளை பாதுகாக்கலாம். மேலும், உணவு பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்களை ஒரே இடத்தில் வைக்காதீர்கள். ஏனெனில் அவைகளை பழுக்க வைக்கும் தன்மை கொண்ட எத்திலீன் வாயு உருவாகும் என்பதால் விரைவாக கெட்டுப்போக வைத்துவிடும்.

அடுத்து, வாழைப்பழத்தை வேறு எந்த காய்க-றிகளுடனும் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் வாழைப்பழத்தில் எத்திலீன் வாயு அதிகம் உள்ளது. அது மற்ற காய்கறிகள், பழ வகைகளை வேகமாக பழுக்க வைப்பதோடு அல்லாமல் கெட்டுப்போகவும் வைத்துவிடும்.

பழங்கள், காய்கறிகளை அதிக வெப்பநிலை கொண்ட இடங்களில் வைக்கும் போது அவை விரைவாக பழுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.