• Sat. Dec 7th, 2024

இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கு கொரோனா!

Feb 14, 2022

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமீலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று, இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

முன்னதாக தனக்கு பின், பிரிட்டனின் வருங்கால ராணியாக கமீலா பொறுப்பேற்பார் என்று ராணி இரண்டாம் எலிசபத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அவரை தொடர்ந்து அவரது மகன் இளவரசர் வில்லியம்க்கும் கொரோனா தொற்று உறுதியானது.

73 வயதான கமீலா 2 டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்.

74 வயதான இளவரசர் சார்லசும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இளவரசர் சார்லஸ் அவருடைய தாயாரான, ராணி இரண்டாம் எலிசபெத்தை கடந்த வாரம் சந்தித்திருந்தார்.

இந்த நிலையில், 95 வயதான ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிடவில்லை.

ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பதை மட்டும் தெரிவித்திருந்தது.