பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்ற அவர், துப்பறவு பணியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பணி செய்த இடங்களில் முன்னாள் முதலாளிகள் ஏழு பேருக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த இலங்கையரின் மோசமான செயலால் 2010ஆம் ஆண்டு பாரிஸில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து அவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியள்ளது.
63 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.