• Wed. Nov 27th, 2024

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம்!

Jul 15, 2021

கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ஒன்று ரூ.4,500 கோடி அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது தளத்தில் செய்தி ஊடகங்களின் செய்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது என்றும் ஆனால் அந்த வருவாயில் செய்தி நிறுவனங்களுக்கு எந்தவித பணமும் அளிப்பதில்லை என்றும் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் ஆணையம் கூகுள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு சரியான தொகையை வழங்க வேண்டும் என்றும் இதுவரை பயன்படுத்தியதற்கு 4500 கோடி அபராதம் விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் இந்த அபராதத் தொகையை எப்படி செலுத்தப் போகிறது என்பதை கூகுள் நிறுவனம் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்காவிட்டால் தினமும் எட்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஆணையத்தின் இந்த தீர்ப்புக்கு கூகுள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது எங்களின் முயற்சிகளை ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் கோடிக்கணக்கான மக்களை ஊடகங்களில் உள்ள செய்தியை க்ளிக் செய்ய ஊக்குவிக்கிறோம் என்றும் இந்த தீர்ப்பு நீதியானது என்றும் தெரிவித்துள்ளது.