திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று(15) பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகியுள்ளனர்.
”நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல்கட்டமாக இன்று பத்து ஈழத் தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்குச் செல்கின்றார்கள்.
உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், இவர்கள் சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தானுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்” எனத் தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மீதமுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ப்பிக்க வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.