• Tue. Sep 10th, 2024

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு

Jul 10, 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு, ஓய்வுபெற்ற மூத்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் தமிழக அரசு நிதி உதவி செய்தது.

இந்த நிதி உதவி அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஜெர்மனியிலுள்ள ஐரோப்பா தமிழர் கூட்டமைப்பு, ஓய்வு பெற்ற மூத்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.