• Mon. Feb 17th, 2025

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவை

Aug 30, 2021

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்ளூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை இயங்கவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்த விமானங்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.