• Sat. Apr 20th, 2024

கடைசியாக எப்போது அழுதீர்கள்?சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

Jul 14, 2021

கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் கடைசியாக அழுத தருணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர் பிச்சை சமீபத்தில் பிபிசிக்கு பேட்டியளித்தார்.

அதில் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய ஜெஃப் பெஸாஸைப் பார்த்து தான் பொறாமை கொள்வதாக சுந்தர் பிச்சை கூறினார்.

அதற்கு காரணம், வரும் ஜூலை 20-ம் தேதி ஜெஃப் பெஸாஸ் தனது சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். பயணிகளை பூமியில் இருந்து 62 மைல் மேல்நோக்கி விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் 11 நிமிட பயணமாக அது இருக்கும் என சொல்லப்படுகிறது. தானும் இதுபோல் விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்க விரும்புவதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இதன்போது கடைசியாக எப்போது அழுதீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, ‘உலகம் முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களை சுமந்துகொண்டு வாகனங்கள் செல்வதை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதேபோல் இந்தியாவிலும் கடந்த மாதங்களில் அப்படியொரு நிகழ்வை பார்த்தேன். நீண்ட நாள்களுக்கு பிறகு அப்போதுதான் நான் அழுதேன்’ என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.