• Tue. Jun 6th, 2023

இலங்கை மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

Mar 29, 2022

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று(28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.