• Wed. Feb 5th, 2025

இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!

Apr 4, 2022

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.