• Sun. May 28th, 2023

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த நபரும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு

Jan 29, 2022

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் , தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 40 வயது இந்திக குணதிலக தனது நான்குவயது மகள் மற்றும் ஆறுவயது மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிள்ளைகள் தனியாக வசிக்கும் தாயை சந்திப்பதற்கு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர் எனினும் அவர்கள் வராததை தொடர்ந்து எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிற்கு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் இந்த மரணங்களுக்கும் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டுநாட்களிற்கு முன்னர் கடற்கரையில் தான் பிள்ளைகளுடன் காணப்படும் படத்தினை குணதிலக வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்மஸிற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவொன்றில் தான் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

அத்துடன் தன்னை மருத்துவரை பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர் தான் உளவியல்நிபுணர்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆழமான கரும் துவாரத்தில் சிக்குண்டுள்ளனர் தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருபோதும் தங்கள் வாழ்க்கையை முடிக்கவிரும்புவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் உண்மையில் தாங்கள் சிக்குண்டுள்ள தாங்கமுடியாத துயரத்திற்கு முடிவை காணவிரும்புகின்றனர் அதிலிருந்து மீள திரும்பமுடியாது மன அழுத்தமே மிகப்பெரிய கொலையாளி எனக்கு அது நன்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார்.

குணதிலக 2014 முதல் தனது சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2